நாற்றமடிக்கும் சிங்கத்தின் குக்க
The Stinking Den
சிங்கம் ஒன்று விலங்குகளைக் கொன்று இறந்த உடல்களைத் தன்னுடைய குகைக்கு இழுத்து வந்தது. பெரும்பான்மையான சதையைத் தின்றுவிட்டு எஞ்சிய எச்சங்கள் குகைக்குள் விட்டுவிடும். நாட்கள் செல்ல செல்ல குகையில் துர்நாற்றம் வீசத் தொடங்கியது. ஒரு முறை, ஒரு கரடி சிங்கத்தை அதன் குகையில் பார்த்து, துர்நாற்றத்தைப் பற்றி முறையீடு செய்தது. இதைக் கேட்டதும் சிங்கம் கரடியைக் கொன்றுவிட்டது. ஒரு நாள், நரி ஒன்று சிங்கத்தின் குகைக்கு வந்தது. குகையில் துர்நாற்றம் வீசுகிறதா என நரியிடம் கேட்டது சிங்கம். தந்திரமான நரி எனக்குச் சளி பிடித்திருப்பதால் என்னால் எந்த வாசனையும் உணரமுடியவில்லை என்றது. இப்படியாக, புத்திசாலியான நரி ஒரு கடினமான சூழ்நிலையிலிருந்து தப்பியது.