கூடா நட்பு கேடாய் முடியும்

The Scorpion and the Tortoise

நண்பர்களான கர்வம்பிடித்த தேள் மற்றும் கருணைமிக்க ஆமை பற்றிய கதை. ஒரு நாள், ஆமை தனது இடத்தைவிட்டு அருகிலிருந்த காட்டிற்குச் செல்ல முடிவு செய்கிறது. தேளும் உடன்வர முடிவு செய்கிறது. காடிற்குச் செல்லும் வழியில், அவர்கள் ஆற்றைக் கடக்க வேண்டியிருந்தது. ஆற்றின் மறுகரைக்கு நீந்திச் செல்லத் தேளைத் தனது முதுகில் உட்கார வைத்து அழைத்துச் செல்கிறது ஆமை. திடீரென்று, ஆமை தனது முதுகில் ஒரு வலியை உணர்கிறது. தனது மேலோட்டைத் தேள் அதன் கொடுக்கினால் துளைக்க முயல்வதைக் கேட்டுத் தெரிந்து கொண்டது. அது ஆமைக்குக் கோபத்தை உண்டாக்கியதால் தேளை ஆற்றில் தள்ளிவிடுகிறது.