நரியும் இறைச்சித் துண்டும்

The Fox and the Piece of Meat

பசியில் இருந்த குள்ளநரி ஒரு இறைச்சித் துண்டைக் கண்டுபிடித்து அதை உண்பதற்காக வீட்டிற்கு எடுத்துச் செல்கிறது. போகும் வழியில், நான்கு கோழிகள் உள்ள ஒரு கோழி முற்றத்தைக் கண்டு நாவில் நீர் வழிய ஏக்கமுறுகிறது. இது மிகவும் ஆபத்தானது என்று பிறிதொரு நரி எச்சரித்தும் பேராசை கொண்ட குள்ளநரி கோழி முற்றதிற்குள் நுழைகிறது. ஆனால் அங்குத் தடியால் தாக்கப்பட்டுப் பயந்து வெளியேறி விடுகிறது. தன் பேராசையால் கோழி, இறைச்சித் துண்டு இரண்டையும் இழக்கிறது குள்ளநரி.