எறும்பும் வெட்டுக்கிளியும்
The Ant and the Grasshopper
ஒரு காலத்தில், எறும்பு ஒன்றும் வெட்டுக்கிளியும் நண்பர்களாக இருந்தனர். எப்பொழுதும் உணவைச் சேகரிப்பதில் எறும்பு குறியாக இருந்தபோது, எந்த வேலையும் செய்யாமல் ஆடுவதிலும் பாடுவதிலும் பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தது வெட்டுக்கிளி. வெட்டுக்கிளியிடம் குளிர்காலத்திற்காக உணவைச் சேகரித்துவைத்துக்கொள்ளக் கூறியது எறும்பு. ஆனால் அதைக் கேட்டுக்கொள்ளவில்லை வெட்டுக்கிளி. குளிர்காலம் தொடங்கியபோது வெட்டுக்கிளியிடம் உணவு எதுவும் இல்லை. ஆனால் எறும்பு நிறைய உணவு வைத்திருந்தது. கடின உழைப்பின் மதிப்பைப் புரிந்துகொண்டதோடு தனக்குப் பாதகமான நேரத்தில் உணவு அளித்த எறும்புக்கு நன்றி கூறியது வெட்டுக்கிளி.