ஆசை மரண தண்டனையை தரும்

The Lean Cat and the Fat Cat

முன்பொரு காலத்தில், மெலிந்த பூனை ஒன்று ஒரு வயதான ஏழைக்கிழவியுடன் வசித்து வந்தது. ஒரு நாள், கொழுத்த பூனையைப் பார்த்த மெலிந்த பூனை உனக்கு எங்கிருந்து உணவு கிடைக்கிறது என்று ஆர்வமாகக் கேட்டது. இதற்கு, அப்பூனை எப்படி ராஜாவின் அரண்மனையிலிருந்து உணவைத் திருடுகிறேன் என்று கூறியதோடு மெலிந்த பூனையையும் தன்னோடு கூட்டிச்செல்வதாகக் கூறுகிறது. கிழவியின் எச்சரிக்கையையும் மீறி மெலிந்த பூனை ஒப்புக் கொண்டு செல்கிறது. மேசையிலிருந்த ராஜாவின் உணவைத் திருடும்போது மாட்டிக் கொள்ளும் மெலிந்த பூனை ராஜாவின் சிப்பாய்களால் கொல்லப்படுகிறது.