பேராசை பெரும் நஷ்டம்

The Golden Swan

முன்பொரு காலத்தில் தங்க இறகுகளைக் கொண்ட அழகிய அன்னம் ஒன்று குளம் ஒன்றில் வாழ்ந்து வந்தது. அந்தக் குளத்தின் அருகே ஏழைப்பெண் ஒருத்தி தன்னுடைய இரண்டு மகள்களுடன் வாழ்ந்து வந்தாள். அப்பெண்ணின் துயரத்தைக்கண்டு தன் இறகுகளைக் கொடுத்து உதவநினைத்தது அன்னம். விரைவில், அந்தப் பெண் ஒரு வசதியான வாழ்க்கை வாழத்தொடங்கினாள். ஆனால் நாட்கள் செல்ல செல்ல, அவள் பேராசை கொண்டு அன்னத்தின் எல்லா இறகுகளையும் பெறுவதற்கு அதனைக் கொல்ல முயற்சித்தாள். இதனால் கோபமடைந்த அன்னம், இனி திரும்ப வரமாட்டேன் என்று கூறியது. அந்தப் பெண் தன் தவறை உணர்ந்துகொள்ளும் தருணத்தில், காலம் கடந்திருந்தது.