கருநாகமும் எறும்புகளும்
The King Cobra and the Ants
முன்பு, பெரிய காடு ஒன்றில் கொடிய நஞ்சுள்ள கருநாகம் ஒன்று வாழ்ந்து வந்தது. அனைத்து விலங்குகளும் அதைக் கண்டு அஞ்சின. ஒரு பெரிய மரத்தின் அருகில் வாழ விரும்பியது ஆனால் அதன் அடிவாரத்தில் இருந்த எறும்புப்புற்றை கருநாகம் விரும்பவில்லை. அதன் பேச்சை எறும்புகள் கேட்காததால், எறும்புப்புற்றை அழித்தது. கோபம் கொண்டு கருநாகத்தைத் தாக்கின எறும்புகள். வலிமை வாய்ந்ததாக இருந்தாலும் அதனால் எறும்புகளை எதிர்த்துப் போராட முடியவில்லை. இறுதியில் கடிபட்டுக் கொண்டே இறந்தது கருநாகம். இக்கதையின் நீதி ‘ஒற்றுமையே வலிமை’.