முயல்களும் யானைகளும்
Elephants and the Rabbit
ஒரு காலத்தில், வறட்சியின் காரணமாக வற்றிப்போயிருந்த ஏரியின் அருகில் யானைகள் வாழ்ந்து வந்தன. யானைகள் தண்ணீரைத் தேடி ஒரு புதிய ஏரியைக் கண்டுபிடித்தது. ஆனால் தற்செயலாக அருகிலிருந்த இருந்த முயல்களை மிதித்து நசுக்கிவிட்டன. முயல்கள் இந்தச் சிக்கலைப் புத்திசாலித்தனமாகத் தீர்க்க முடிவு செய்தன. ஒரு சின்ன முயல் நிலாக் கடவுளின் தூதுவன்போல நடித்து யானை ராஜாவிடம் கடவுள் உங்கள் மீது கோபமாக இருப்பதாகக் கூறியது. யானை ராஜா, கடவுளின் கோபத்திற்கு அஞ்சி அந்த இடத்தைவிட்டு வெளியேற ஒப்புக்கொண்டது. முயல்கள் தங்கள் புத்திசாலித்தனத்தால் யானைகளை வெளியேற்றிவிட்டு நிம்மதியாக வாழ்ந்தன. அறிவுத்திறம் வலிமையை வெல்லும் என்பது இக்கதையின் படிப்பினையாகும்.