யானையும் நாயும்
The Elephant and the Dog
ஒரு காலத்தில், அரசனுக்குப் பிரியமான யானை ஒன்று இருந்தது. யானைக்குச் சிறப்பு கவனிப்பும் இனிப்பான அரிசிசாதமும் வழங்கப்பட்டது. குறுகிய காலத்தில் அந்த யானைக்கு நாயுடன் நட்பு ஏற்பட்டது. யானை இனிப்பான அரிசிசாதத்தை நாயுடன் பகிர்ந்து கொள்ள ஆரம்பித்தது. ஒரு நாள், ஒரு விவசாயி நாயை வாங்கியதால், யானை சாப்பிடமறுத்ததுடன் மன வருத்தம் அடைந்தது. அரசன் நாயைக் கண்டுபிடிக்க அமைச்சரை அனுப்பினார். நாயைத் திருப்பி அனுப்ப வேண்டும் இல்லையென்றால் அபராதம் விதிக்கப்படும் என்று அமைச்சர் அறிவிப்புச் செய்தார். விவசாயி நாயை விடுவித்தார். யானையும் நாயும் மகிழ்ச்சியுடன் மீண்டும் இணைந்தன. நட்பின் முக்கியத்துவத்தையும் உண்மையான நட்பு எத்தகைய மகிழ்ச்சியைத் தரும் என்பதையும் இக்கதை நமக்குக் கற்பிக்கிறது.