முள்ளம்பன்றியும் பாம்புகளும்
The Porcupine and the Snakes
ஒருவரின் பெருந்தன்மையைப் பயன்படுத்திக் கொள்வதன்வழி ஏற்படும் விளைவுகள் பற்றிய எச்சரிக்கைக் கதைதான் முள்ளம்பன்றியும் பாம்புகளும். இந்தக் கதையில் பாம்புகள் முள்ளம்பன்றிக்கு அடைக்கலம் கொடுக்கின்றன. ஆனால் முள்ளம்பன்றியின் சுயநலமான இயல்பு பாம்புகளைத் தங்கள் சொந்த வீட்டைவிட்டு வெளியேற வைக்கிறது. மற்றவர்களின் பெருந்தன்மைக்கு மதிப்பளிப்பது, அவர்களின் கருணையைத் தனக்குச் சாதகமாக்கிக்கொள்வது தொடர்பான படிப்பினைகளை இக்கதை கோடிட்டுக்காட்டுகிறது.