பூனையும், தேவாங்கும், முயல்குட்டியும்

The Cat, the Rabbit and the Weasel

முன்பு, ஒரு முயல் காட்டில் மிகவும் சுத்தமான, நேர்த்தியான வீட்டில் வசித்து வந்தது. முயல் இல்லாத நேரத்தில் அதன் வீட்டிற்குள் தேவாங்கு வந்தது. முயல் திரும்பிவந்து பார்த்தபோது தன்னுடைய படுக்கையில் தேவாங்கு தூங்குவதைக் கண்டது. தேவாங்கு அந்த இடத்தைவிட்டு வெளியேறமாட்டேன் என்று பிடிவாதம் செய்தது. ஆகையால் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க ஒரு பூனையை அழைத்தனர். அந்தக் கொடியபூனை அவர்களின் சண்டையைக் கேட்பதுபோல பாசாங்கு செய்துவிட்டு முயல், தேவாங்கு இரண்டையும் தாக்கி, முயலின் வீட்டில் அது வசதியாக இருக்கிறது. இரண்டுபேர் சண்டையிடும் போது, மூன்றாம் ஒருவருக்கு எப்போதும் ஆதாயம் கிடைக்கும் என்பதே நீதி.