ஒரு வேடிக்கையான பறவை
Set me Free
கோபி கூண்டிற்குள் அடைத்து வைத்திருந்த பறவையின் பெயர்தான் டுவிட்டி. கோபியின் பக்கத்து வீட்டுக்காரரான ராமா, டுவிட்டி சுதந்திரமாக இருக்கவேண்டுமென விரும்பினான். அதற்காக “கூண்டைத் திற; என்னை விடுதலை செய்” என்று பறவைக்குச் சொல்லக் கற்றுக் கொடுத்தான் ராமா. சிறிது காலம் ஆனது. ஒரு நாள், டுவிட்டி இறுதியாக அந்த வார்த்தைகளைக் கூறியபோது கோபமடைந்தான் கோபி. கோபி கூண்டைத் திறந்ததும் மகிழ்ச்சியாய் பறந்து சென்றது டுவிட்டி.