நரியும் கழுகும்
The Fox and the Eagle
ஒரு நரி மற்றும் அதன் குட்டிகளை பற்றிய மனதை வருடும் பழங்கதை இது. ஒரு காலத்தில், பெரிய மரம் ஒன்றின் அடியில் ஒரு நரி தன் குட்டிகளுடன் வாழ்ந்து வந்தது. ஒரு நாள், கழுகு ஒன்று வந்து அந்த மரக்கிளையில் கூடு கட்டியது. விரைவில், கழுகு குஞ்சுகள் பொறித்தது. கழுகு, நரி இரண்டும் தங்கள் குழந்தைகளுக்கு உணவைத்தேடி வெளியே செல்லும் - ஒரு நாள் குட்டிநரிகள் தனியாக இருக்கும்போது கீழே வந்து நரிக்குட்டி ஒன்றைத் தூக்கிச் சென்றது கழுகு. மாலையில் நரி திரும்பி வந்தபோது, குட்டிகளில் ஒன்றைக் காணவில்லை. பரிதாபமான நரி குட்டியைத் திருப்பித்தருமாறு கழுகிடம் கெஞ்சியது. ஆனால் கழுகு மறுத்துவிட்டது. உடனே, கழுகுக்குப் பாடம் கற்பிக்கவும் தன் குட்டியை மீட்கவும் ஒரு திட்டம் வகுத்தது நரி. தன் குட்டியை நரி எப்படி மீட்டது என்பதை அறிந்து கொள்ள முழுக்கதையையும் படியுங்கள்.