தன்னலம் கொண்ட நண்பர்கள்
Selfish Friends
முன்பொரு காலத்தில், ஒரு நரிக்குப் பல நண்பர்கள் இருந்தனர். புகழ்பெற்றிருப்பதாகவும் நிறைய விலங்குகளால் விரும்பப்படுவதாகவும் தற்பெருமை கொண்டிருந்தது நரி. ஒருநாள், வெளியில் வந்தபோது, வேட்டை நாய்களின் சத்தம் தொலைவில் கேட்டது. அது தன்னுடைய நண்பர்களின் உதவியைப்பெற எண்ணியது. ஆனால் அதற்கு யாரும் உதவவில்லை. தன்னுடைய நண்பர்கள் சுயநலவாதிகள் என்பதை உணர்ந்துகொண்ட நரி ஆபத்திலிருந்து தப்பிக்கும் வழியை கண்டுபிடிக்க வேண்டியிருந்தது. ஆபத்தில் உதவுபவனே உண்மையான நண்பன் என்பதே இக்கதையின் நீதி.